பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது வங்குரோத்து அடைந்துவிட்டதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2005 முதல் 2014வரை இந்நாட்டை ஆட்சிசெய்த பிரதானிகள் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர். தேவையற்ற அபிவிருத்திகளுக்காக கடன்களை பெற்றனர். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு இதுவே பிரதான காரணம். நாட்டு மக்களுக்கு தற்போது இருளில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

94 இல் நான் ஆட்சியை பொறுப்பேற்றேன். ஊழல் செய்யவில்லை. செய்வதற்கு இடம் அளிக்கவும் இல்லை. இதனால் நான் வீடு செல்லும்போது நாடு சிறந்த மட்டத்தில் இருந்தது. ” என்றார்.