ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரின் மாமாவான ஜே.ஆரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தேர்தலை பிற்போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்று ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தலை இழுத்தடிக்கவே சர்வஜன வாக்கெடுப்பு குறித்து கதைக்கப்படுகின்றது, இத்திட்டம் வெற்றியளிக்க ஜே.வி.பி. ஒருபோதும் இடமளிக்காது எனவும் அவர் கூறினார்.

” தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குகூட தெரிவு செய்யப்படாதவர், அவரது ஒட்டுமொத்த கட்சியும் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டது. அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள கட்சியாகும். எனவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை மார்ச் 20ஆம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும். தற்போது தேர்தல் ஆணையத்துக்கு அந்த அதிகாரம் கிடைத்துள்ளது. ஆனால் தேர்தலை பிற்போட அரசு முயற்சிக்கின்றது. அதனால்தான் சர்வஜன வாக்கெடுப்பு பற்றிய கதை பரப்படுகின்றது  ” – என்றார் அநுரகுமார திஸாநாயக்க.