மோசமடையும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக மூன்றில் இரண்டு பங்கு பிரித்தானியர்கள் எதிர்வரும் பண்டிகை காலத்தில் செலவை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு முறை கிறிஸ்துமஸ் பண்டிகை வந்த சுவடு தெரியாமல் சென்றது. ஆனாலும் தற்போது முக்கால்வாசி பிரித்தானியர்கள் பெரிய கொண்டாட்டங்களுக்குத் திட்டமிடுவதில்லை என்றே ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில், 49% மக்கள் பரிசுகள் வாங்குவதை குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். 46% மக்கள் வெளியே சென்று உணவருந்துவதை விட்டுவிட்ட இருக்கிறார்கள் மற்றும் சுமார் 35% மக்கள் ஊர் சுற்றுவதை வீட்டுவிட்டு, வீட்டிலேயே உணவு தயாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, மிக குறைந்த கட்டணத்தில் உணவுப் பொருட்கள் வாங்கவும் 45% மக்கள் திட்டமிட்டுள்ளனர். பரிசுப் பொருட்களுக்காக மக்கள் பணம் செலவிட யோசிப்பதே நாட்டின் உண்மை நிலையை புரிந்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.
பணவீக்கம் 10% கடந்துள்ளது, பிரித்தானிய நுகர்வோரின் மன நிலை நம்பிக்கையற்றதாகவும் குடும்பங்கள் செலவினங்களை கட்டுப்படுத்த போராடுவதாகவும் ஆய்வில் குறிப்பிடுகின்றனர்.
இணைந்திருங்கள்