அமெரிக்காவின் (US) கலிஃபோா்னியா (California) மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது, ரிக்டா் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவாயுள்ளது.

இதுவேளை, லொஸ் ஏஞ்சலீஸ் (Los Angeles) நகருக்கு வடமேற்கே 137 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

சேதங்கள்

குறித்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டாலும் சேதங்கள் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை.