அமைச்சரவை அமைச்சுப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை காரணமாக அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 எம்.பிக்களின் பெயர்கள் அடங்கிய அமைச்சுப் பதவிகளுக்கான பட்டியல், சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் தொடர்பான பிரச்சனை காரணமாகவே இந்த நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அமைச்சரவை நியமனம் தாமதமாகின்றமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதியிடம் அடிக்கடி கேட்ட போதும், குறித்த 4 பேருக்கு பதவி வழங்க நிலவும் தயக்கம் காரணமாக மேலும் தாமதமாகி வருவதாக தெரியவருகிறது.
இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிகள் அமைச்சுப் பதவி கிடைக்காமல் மிகவும் சங்கடத்தில் உள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இணைந்திருங்கள்