பொலனறுவை, வெலிக்கந்தை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சுமார் 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இவ்வாறு குழுவொன்று தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

தப்பிச்சென்றவர்களில் சுமார் 35 பேர் மீள சரணடைந்துள்ளனர். ஏனையோரை தேடும் பணி இடம்பெறுகின்றது. புனர்வாழ்வு முகாமைசூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.