கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கிடைத்த தேசிய பட்டியலின் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு செல்வார் என எதிர்பாப்பதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகம் சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றம் செல்ல மக்கள் ஆணை எமக்கு கிடைக்கவில்லை. தேசியப்பட்டியல் மூலமே ஒரு ஆசனம் கிடைத்தது.

தேசிய பட்டியலில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்றே செயற்குழுவால் தீர்மானித்து அறிவிதுள்ளோம்.

ஆகவே சரியாம நேரம் வரும்போது பாராளுமன்றிற்கு செல்வார் எனும் நம்பிக்கை எமக்குள்ளது.

எனினும் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற,ம் செல்ல மறுத்தால் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன செல்வார்.

அதற்கான அனுமதியை கட்சியின் அதிகாரசபை வழங்கி உள்ளது. இருந்தபோதும் பாராளுமன்றத்துக்கு வெளியில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்து, அவர்களை ஊக்கப்படும் வேலைத்திட்டங்களை தற்போது ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றோம். கிராம மட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

கிராம மட்டத்தில் மக்களுடனான சந்திப்புக்களின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தேவையை தற்போது அவர்கள் உணர்ந்து வருவதை எம்மால் விளங்கி கொள்ள முடிகிறது என்றார்.