நவம்பர் 15ஆம் திகதி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இவர் களமிறங்குது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஓஹியோவில் கூடியிருந்த ஏராளமான மக்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், நவம்பர் 15ஆம் திகதி ஃப்ளோரிடாவில் உள்ள பால்ம் கடற்கரையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன் என்று தெரிவித்தார்.
அமெரிக்க தொழிலதிபரான டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றாா்.
அடுத்து, 2020-ஆம் ஆண்டு ஜனாதிபதி தோ்தலிலும் குடியரசு கட்சி சாா்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினாா்.
ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தோ்தலில் மோசடி நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்