வவுனியா புகையிரத நிலைய வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது இராணுவத்தினரின் பேருந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரிலிருந்து புகையிரத வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த இராணுவத்தினரின் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.