ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள ஒரு குடும்பம் வறுமையின் காரணமாக தங்கள் குழந்தையை விற்க முயன்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மாகாணத்தில் உள்ள சில உள்ளூர்வாசிகள் அக்குடும்பத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த உணவு மற்றும் பிற உதவிகளை வழங்கிய பின்னர் இரண்டு வயது குழந்தை விற்கப்படாமல் காப்பாற்றப்பட்டது.

இதுகுறித்து குழந்தையின் தாய் கூறும்போது, “நான் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன்; என்னிடம் சாப்பிட அல்லது எரிபொருளைப் பயன்படுத்த எதுவும் இல்லை; குளிர்காலத்தில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கமுடியவில்லை. கடுமையான வறுமையின் காரணமாக தனது குழந்தையை விற்க முயற்சி செய்ததாக அவர் கூறினார்.

மிகவும் மோசமான நிலையில் அங்கு வசிக்கும் மாகாணம் மற்றும் குடியிருப்பாளர்களின் நிலைமை குறித்து அதிகாரிகளிடம் அப்பெண் கூறினார். உள்ளூர் அரசாங்கமோ அல்லது மனிதாபிமான அமைப்புகளோ தனக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த உதவியும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததில் இருந்து, அந்நாட்டில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.