கொலம்பியாவில் உள்ள பள்ளியில் 11 குழந்தைகள் Ouija Board Game விளையாடிய பிறகு மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் விசித்திரமான இந்த சம்பவத்தில், மயக்கமடைந்த பள்ளி மாணவர்கள் இறந்தவர்களை தொடர்பு கொள்ள Ouija பலகையைப் பயன்படுத்தியதாக்க கூறப்படுகிறது.
ஹடோவில் உள்ள விவசாய தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆசிரியர்கள் எதேச்சையாக பார்த்தபோது, 13 முதல் 17 வயதுடைய 11 மாணவர்கள் மயக்கமடைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மாணவர்களுக்கு கடுமையான வாந்தி, வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக சோகோரோ மாவட்டத்தில் உள்ள மானுவேலா பெல்ட்ரான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவ அறிக்கையில், மாணவர்கள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஹாடோவின் மேயர், ஜோஸ் பாப்லோ டோலோசா ரோண்டன், Ouija Board-ஐ அப்படியே நிராகரித்துவிடமுடியாது, நடந்து வரும் விசாரணையில் அதுவும் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறினார்.
விசாரணையில், மாணவர்கள் ஒரு கொள்கலனிலிருந்து தண்ணீரை குடித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், அவர்கள் ஒரு குளத்தில் இருந்து வந்ததாகவும், அவர்களுக்கு சாப்பிட எதோ கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், மாணவர்களை விசாரித்ததில், அவர்கள் ஒரே குவளையில் தண்ணீரைக் குடித்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
ஓய்ஜா போர்டு விளையாடியதாகக் கூறப்பட்ட நிலையில், குழந்தைகளில் உளவியல் மாற்றத்தை மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்று மருத்துவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் உண்மைகள் தெளிவுபடுத்தப்படும் வரை ஒரு முடிவுக்கு வரப் போவதில்லை என்று கல்வி நிறுவனத்தின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணைந்திருங்கள்