ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என அறியமுடிகின்றது.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பஸில் ராஜபக்ச அமெரிக்கா பறந்திருந்தார். இதனையடுத்து மொட்டு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு நாமலிடம் கையளிக்கப்பட்டது. அவர் பதில் தேசிய அமைப்பாளராக செயற்பட்டார்.
வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னரே பஸில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இணைந்திருங்கள்