சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” சமஷ்டி அடிப்படையிலான தீர்வே எங்கள் இலக்கும்.தமிழ்க் கட்சிகள் இது விடயத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை, அதனால்தான் பேச்சுகளை நடத்துவதில் இழுபதி – தாமதம் என அதிகார தரப்பு காரணம் கூறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளித்துவிடக்கூடாது.” எனவும் அவர் கூறினார்.
இணைந்திருங்கள்