இஸ்ரேல்(israel) மீது பாரிய ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந் தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்புகிறார் என அவருடைய அலுவலம் தெரிவித்து உள்ளது.

 தெற்கு லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.

 தாக்குதலுக்கு பதிலடி

அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த ரொக்கெட் தாக்குதல் பற்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் கூறும்போது, லெபனானில் கிராமம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதற்கு பதிலடியாக, கோலன் ஹைட்சில் உள்ள இராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தினோம் என தெரிவித்தது.

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் : பலர் பலி : உடன் நாடு திரும்புகிறார் பெஞ்சமின் நெதன்யாகு | Rocket Attack On Israel

எனினும், இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி கூறும்போது, ஹிஸ்புல்லா அமைப்பு பொய் கூறுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

அதிகரித்துள்ள பதற்றம்

அந்த அமைப்பின் முக்கிய தளபதிகளுக்கு எதிராக போர் தொடுக்கும்படி இஸ்ரேல் தலைவர்களிடம் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நெருக்கடி எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது நடந்த இந்த கொடிய தாக்குதலால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. 

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் : பலர் பலி : உடன் நாடு திரும்புகிறார் பெஞ்சமின் நெதன்யாகு | Rocket Attack On Israel