உலக நாடுகளில் வடகொரியாவில் நடக்கும் சம்பவங்கள் எப்போதும் மர்மகாவே இருக்கும். அங்கு ஊடங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகொரியாவில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் வெளி உலகத்தின் பார்வைக்கு வருவது சிரமாகவே இருக்கும். வடகொரியா நாடு முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. வடகொரியாவில் ஆபாச படம் பார்ப்பது மற்றும் அது சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவர்கள் மீது மரணதண்டனை வரை விதிக்கப்படுகிறது.
ஏனென்றால் ஆபாச படம் சமூத சீரழிவை அழிக்கும் என்பது அதிபர் கிம் ஜாங் உன்னின் கருத்தாக உள்ளது.இந்நிலையில் வடகொரியாவில் ஆபாச படம் பார்த்த சிறுவன் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி படிக்கும் சிறுவன் இணையத்தில் ஆபாச படத்தை பார்த்துள்ளான். இதனை அந்நாட்டு காவல் அதிகாரிகள் ஐபி முகவரியை வைத்து கண்டுபிடித்துள்ளனர்.ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தையும் நாடு கடத்தி உள்ளனர்.
வடகொரியாவின் எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளதாக வடகொரிய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை. மேலும் சிறுவன் படித்த பள்ளியின் தலைமை ஆசியர்க்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு சட்டத்தின் படி பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் அந்த பள்ளி தலைமை ஆசிரியர்க்கும் பொறுப்பு உள்ளது என்பதாகும். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர்க்கு கடுமையான கூலி வேலை செய்யும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்