காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) வான்வழித் தாக்குதலில் அல் ஜசீரா ஊடகவியலாளர் இஸ்மாயில் அல்-கோல் மற்றும் அவரது ஒளிப்பதிவாளர் ரமி அல்-ரிஃபி ஆகியோர் கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, நேற்றையதினம் (31) ஐ.நாவின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் மற்றும் இதுபோன்ற பிற சம்பவங்கள் முழுமையாகவும் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யார் இந்த இஸ்மாயில் ஹணியா? மாபெரும் போருக்கு வித்திட்டுள்ள படுகொலை!
பலி எண்ணிக்கை
மேலும், ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பது, ஐநாவின் திறன் என கூறிய செய்தித் தொடர்பாளர், அதனை சரியாக செய்து வருவதாவும் அதற்காக ஆயுதங்களில் கை வைத்தவர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை 165 ஆக அதிகரித்துள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இணைந்திருங்கள்