யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் நுணாவில் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (01-08-2024) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பாதசாரி! | Pedestrian Died In A Motorcycle Accident In Jaffna

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 56 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பாதசாரி! | Pedestrian Died In A Motorcycle Accident In Jaffna

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் பாதசாரிகள் இருவரும் மோட்டார் சைக்கிள் சாரதியும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.