வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

100 நாள் செயல்முனைவின் இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு கிழக்கு பிரதேசம் எங்கும் சமஷ்டியை வலியுறுத்திய துண்டுப்பிரசுர பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

திருகோணமலையில் சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் | Pamphlet Emphasizing Samashti In Trincomalee

அந்தவகையில் திருகோணமலை சிவன்கோவில் பகுதி மற்றும் லிங்கநகர் சந்தி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (02) மாலை துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. கண்டுமணி லவாகுசராசா கூறுகையில்,

திருகோணமலையில் சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் | Pamphlet Emphasizing Samashti In Trincomalee

குறித்த பிரச்சார நடவடிக்கையானது தெடர்ச்சியாக 90 நாட்களுக்கு வடக்கு கிழக்கு பிரதேசங்கள் எங்கும் நடைபெறவுள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி தீர்வு தொடர்பான விடயங்களை முன்வைப்பார்களாக இருந்தால் அவர்கள் சார்ந்து தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் | Pamphlet Emphasizing Samashti In Trincomalee