கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாளை ஞாயிற்று கிழமை திருகோணமலையில் பல்வேறு தரப்புகளை நேரடியாக சந்திக்கவுள்ளார்,
அந்த வகையில் நாளைய தினத்தில் திருகோணமலை மாவட்ட சுற்றுலா சங்கம் ,வணிக சங்கம் ,மகளிர் அமைப்புக்களையம் நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார் .
மேலும் கௌரவ பாராளமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட அரசியற் கட்சி அமைப்பாளர்களுடன் எதிர் கால அரசியல் நிலைமை தொடர்பாகவும் கலந்துரையாட உள்ளார் .
மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களுடன் கௌரவ பாராளமன்ற உறுப்பினர் குகதாசன் தலைமையில் சந்திப்பு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார் .அத்துடன் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்