எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்தின் இறுதி பயணமாகும் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது தேர்தல் காரியாலயத்தில் நேற்று (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,”கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போன அவர் எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார் என கேட்கிறோம்.

என்னை பொறுத்தவரை நான் ரணில் விக்ரமசிங்கவை மதிக்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலின் இறுதியில் ரணில் கடலில் குதிப்பார்! பகிரங்கமாக சாடும் விஜயதாச ராஜபக்ச | Sri Lanka Political Crisis

ஏனெனில் இந்த தேர்தலுடன் முடிவடையப்போகும் அவரது அரசியல் பயணத்தில், அவர் தனிமையாக சென்று கடலில் குதிக்காமல், தன்னுடன் இருக்கும் திருடர்கள், மோசடிகாரர்களையும் இணைத்துக்கொண்டு கடலில் குதித்தால், நாட்டுக்கு செய்யும் உதவி என நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சி ஒன்று இல்லை. வேறு ஒரு குழுவுக்குரிய தேர்தல் சின்னமான எரிவாயு சிலிண்டரை எடுத்துக்கொண்டே போட்டியிடுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.இது மிகவும் கவலைக்குரிய நிலையாகும்.

தேர்தல் சின்னம்

ரணில் விக்ரமசிங்கவின் 30 வருடகால தலைமைத்துவத்தின் கீழ் 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த ஐக்கிய தேசிய கட்சி 2020 பொதுத் தேர்தலுடன் காணாமல் போகும் என நான் 2018ல் தெரிவித்திருந்தேன்.

ஜனாதிபதி தேர்தலின் இறுதியில் ரணில் கடலில் குதிப்பார்! பகிரங்கமாக சாடும் விஜயதாச ராஜபக்ச | Sri Lanka Political Crisis

அவரின் தலைமையில் அவருக்கு கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போன அவர் எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார்.” என கூறியுள்ளார்.