காஸாவில் (Gaza) அடையாளம் தெரியாத பல உடல்களைக் கண்டெடுத்துள்ளதாக இஸ்‌ரேல் (Israel) இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், உடல்களை மீட்டு அவற்றை அடையாளம் காணும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக இஸ்‌ரேல் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, உடல்களை அடையாளம் காண பல மணி நேரம் எடுக்கும் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பணயக்கைதிகளை சவப்பெட்டிகளுக்குள் தான் அனுப்புவோம்: மிரட்டுகிறது ஹமாஸ் !

அமெரிக்க அதிபர் 

இது தொடர்பாக இஸ்‌ரேலியர்களுடன் தமது அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக அமெரிக்க (America) அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

காஸாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத உடல்கள் : வெளியான தகவல் | Israel War On Gaza Update Many Killed Attacks

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து காஸாவில் மூண்ட போரில் இதுவரை குறைந்தது 40,691 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போரின் காரணமாக ஏறத்தாழ 94,060 பேர் காயமடைந்துள்ளதுடன் இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கூடிய விரைவில் கையெழுத்திடப்படக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.