தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான நாடளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
இந்த கலந்துரையாடலில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு, ஜம்மியத்துல் உலமாவின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், அனுரகுமார திஸாநாயக்கவுடன் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டுள்ளார்.
இணைந்திருங்கள்