திருகோணமலையில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த 35 வயதுடைய மகனுக்கு திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை விதித்து நேற்று வியாழக்கிழமை (22) தீர்ப்பளித்தார்.

கடந்த 2022 ஏப்ரல் 17ஆம் திகதி பாலத்தடிச்சேனை, தோப்பூர் பிரதேசத்தில் மது போதையில் இருந்த மகன், 59 வயதான தனது தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

தமிழர் பகுதியில் இளைஞனுக்கு மரண தண்டனை ; பெற்ற தந்தைக்கு மகன் நிகழ்த்திய கொடூரம் | Son S Brutal Act Against Father In Tamil Area

மரண தண்டனை

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் இவருக்கு எதிராக மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அடுத்தடுத்த விசாரணைகளின் பின்னர் 2024ஆம் ஆண்டு திருகோணமலை உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.