கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் ஆலோசனைக்கமைவாக, சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலகம் என்பனவற்றின் ஏற்பாட்டில் 31.10.2026ம் திகதி ‘கிளீன் சிறிலங்கா – அத்தம’ வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களும் கலந்துகொண்டார்.

சாய்ந்தமருது மேற்குப் புறக் குருநல் கஞ்சி ஆற்றுப் பிரதேசம் சாய்ந்தமருது 17ஆம் பிரிவு கடற்கரைப் பிரதேசம், பௌசி விளையாட்டு மைதானம் மற்றும் அதனை அண்டிய கடற்கரைப் பகுதிகள் மற்றும் கல்முனை,பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை, சேனைகுடியிருப்பு போன்ற பிரதேசங்களில் அத்தம திட்டத்தின் கீழ் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது கல்முனை மாநகர சபை மற்றும் நீர்ப்பாசன திணைக்களங்கள் இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தன.
இதன்போது பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் பிரஜா சக்தி தலைவர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பெருமளவில் பங்கெடுத்தமை விசேட அம்சமாகும்.