ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த நிகழ்வில் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கானதாகும்.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன.ஆகவே, இலங்கைக்கு எதிராக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
அத்துடன் இவ்விடயத்தில் எவரும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.ஆகவே, ஐ.நா.பிரேரணை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைந்திருங்கள்