கட்டார் நாட்டில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் ஆனால் குறைந்த சம்பளமாக 1000 ரியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தொழில் அமைப்பின் கட்டார் நாட்டிற்கான அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளதுடன் கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதனடிப்படையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்த முதலாவது மத்திய கிழக்கு நாடாக கட்டார் திகழ்கிறது.

இதன் அடிப்படையில் கட்டார் நாட்டில் பணிபுரியும் அனைத்து நாட்டு ஊழியர்களுக்கும் இது உரித்தாகும்.

நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பணிபுரியும் அனைவருக்கும் இந்த சம்பள கட்டமைப்பில் உள்வாங்கப் படுவார்கள்.
குறைந்தபட்ச சம்பளமாக 1000 ரியால் வழங்கப்படுவதுடன் தொழிலாளர்களுக்கான தங்குமிடம் உணவு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றால் அதற்கான மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என சர்வதேச தொழில் கட்டார் நாட்டு காண அலுவலகம் தெரிவித்துள்ளது.