பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க வந்த வீராங்கனையை கடத்த திட்டமிட்டிருந்தது பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு வந்த தடகள வீராங்கனையான Krystsina Tsimanouskaya என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க இருந்தார். அப்போது திடீரென்று அவர் போட்டியில் கலந்துகொள்ள கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அவரை சொந்த நாட்டிற்கு கடத்த சிலர் முயற்சித்தனர்.146அப்போது அவர் உடனடியாக, ஜப்பான் காவல்துறையினரிடம் உதவி கேட்டதால், அவர்களின் கடத்தல் திட்டம் ஈடேறவில்லை. தற்போது அவர் போலந்தில் வாழிட உரிமம் கோரவுள்ளார். இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் சமூக ஆர்வலர் மர்மமாக உயிரிழந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, வழக்கமாக பெலாரஸ் நாட்டின் அதிபர், Alexander Lukashenko, தன்னை எதிர்க்கும் மக்களை கைது செய்து கொடுமைப்படுத்துவார். எனவே அதிபரை எதிர்க்கும் மக்களை பாதுகாப்பாக பெலாரஸ் நாட்டை விட்டு, பிற நாட்டிற்கு தப்பிச்செல்ல சமூக ஆர்வலரான,  Vitaly Shishov தான் உதவி செய்வார்.

இந்நிலையில் உக்ரைனில் வசித்த, Shishov, அவரின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே, உக்ரைன் நாட்டின் அதிகாரிகள், பெலாரஸ் உளவு துறையைச் சேர்ந்த நபர்கள், அகதிகளாக உக்ரைன் நாட்டிற்குள் புகுந்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனிடையே, கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட தடகள வீராங்கனை Krystsina, தடகள விளையாட்டின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் Yuri Moisevich-ற்கு தடை விதிக்க கோரியுள்ளார். மேலும், தன்னை ஒலிம்பிக்கில் பங்கேற்க கூடாது என்று தீர்மானித்தது யார்? என்று விசாரணை நடத்தவும் கோரியுள்ளார்.

அதிபரை எதிர்த்த சமூக ஆர்வலரின் மர்ம மரணம், Krystsina-விற்கு இருக்கும் பேராபத்தை குறிக்கிறது என்று கூறப்படுகிறது.