ஓட்டமாவடி – மஜ்மா நகரில் ( சூடுபத்தினசேனையில்) கொரோனா தொற்றினால் உயிரிழந்த 1470 பேரின் உடல்கள் நேற்று (09) வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மஜ்மா நகர் – 3 ஏக்கர் காணியில் ஆரம்பத்தில் நல்லடக்கம் இடம்பெற்றன. பின்னர் – இந்த காணி போதாது என்ற நிலையில் , அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில்,

1380 முஸ்லிம்கள்

41 இந்துக்கள்

, 28 கிறிஸ்தவர்கள்,

21 பௌத்த மதங்களைச் சேர்ந்த1470 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அடையாள கற்கள் நாட்டப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு அந்த இலக்கங்களின் உடல்கள் யாருடையது என்ற பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு பிரதேச சபையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த 5 ஏக்கர் காணியில் இன்னும் சுமார் 500 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை – நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகள் , கொரோனா தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்றன.

(Boomudeen Malik)