நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு ரூ.100,000 அபராதம் விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்காக அரசாங்கத் தால் நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட ஆகக்கூடிய சில்லறை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக 100,000 ரூபா அபராதம் விதிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட ஆகக்கூடிய சில் லறை விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 2,500 ரூபா அபராதம் தொகை 100,000 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.வர்த்தக அமைச்சர் பந்துலவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.