ஆப்கானிஸ்தானின் ஆட்சியை இன்று தலிபான் தீவிரவாதிகள் பிடித்துள்ள நிலையில் தாலிபான்களுடன் நட்பு உடன் செயல்பட நாங்கள் தயார் என்று சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதை அடுத்துஇ ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அனைத்து பக்கங்களிலிருந்தும் தலிபான்கள் நுழையத் தொடங்கினர்.

அதன்படி இன்று காலை முழுவதுமாக கைப்பற்றி, ஆட்சியை பிடித்துள்ளதுடன் அமைதியான முறையில் ஆட்சியை நடத்துவதற்கு தாலிபான்கள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு “இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்” என தலிபான்கள் பெயர் மாற்றம் செய்யவுள்ளனர். புதிய அரசு பதவி ஏற்ற உடன் இது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும், முன்பை போல அல்லாமல், இந்த புதிய ஆட்சியில் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தாலிபான் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஏற்கனவே அங்கீகரித்துள்ள நிலையில், தற்போது சீனாவும் தாலிபான் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சீனா வெளியிட்ட அறிவிப்பில்,

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தாலிபான்களுடன் நட்பு உடன் செயல்பட நாங்கள் தயார் என அறிவித்துள்ளதுடன், சீனாவில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும், முதலீடுகளை செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோல ரஷ்யாவின் தூதர்கள் நாளை தாலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

இதேவேளை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆப்கானில் இருந்து தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.