நாட்டில் தற்போது சுகாதாரப் பிரிவின் கொள்ளளவு அதன் திறனைத் தாண்டிவிட்டது என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது சுகாதாரப் பிரிவு அதன் கொள்ளளவு திறனைத் தாண்டிவிட்டது என்றும் எதிர்காலத்தில் கொரோனா தொற்றாளர்கள் வீதிகளில் மரணித்து விழுவார்கள் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாட்டை மீண்டும் முடக்குமாறு அரசாங்கத்தைக் கேட்க மாட்டேன் என்றும் நாட்டின் நிலைமைகளைப் புரிந்துகொண்டு சுய பயணக் கட்டுப்பாடுகளை தமக்கு விதிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் உயிர் மீது ஆசை இருந்தால் வீட்டில் தங்கியிருக்குமாறு கடுமையாக வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பொது மக்களை இழந்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கே:எதிர்வரும் வாரங்கள் இலங்கையை எவ்வாறு கொரோனா தொற்று பாதிக்கும், உங்களின் கருத்து என்ன?
ப:தற்போது மூன்று நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது மூன்று நாட்களில் கொரோனா தொற்றால் மரணங்களின் எண்ணிக்கை 150 தாண்டிவிட்டது. நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.
நாட்டில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.எதிர்காலத்தில் கொரோனா தொற்றாளர்களின் மரணங்கள் அதிகரிக்கும். வைத்தியசாலைகள் அவற்றின் கொள்ளளவு திறனை தாண்டிவிட்டன. எதிர்வரும் நாட்களில் மிகவும் ஆபத்தான நிலைமைக்கு நாடு தள்ளப்படும்.
கே: நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் உண்மையான நிலை என்ன?
ப : தற்போது கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின் படி 3 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான பல முரண்பாடான கருத்துகள் இடம்பெற்று வருகின்றன.அதே போன்று அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் அதன் அதி காரிகள், பேராசிரியர்கள் மற்றும் எங்களுக்கும் கொரோனா தொற்று தொடர்பான புள்ளிவிபரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவுள்ளது. இது குறித்துச் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை சரி யான முறையில் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கே: விமலின் கட்சியின் உறுப்பினர் மொஹமட் முஸம்மில் கொரோனா நோய்த் தொற்று பிரிவுக்கும் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் அர சாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் சூழ்ச்சியிருப்பதாகக் குற்றஞ்சாட்டு சுமத்தியுள்ளார். இதில் சூழ்ச்சியிருக்கிறதா?
ப: சூழ்ச்சியிருப்பதாகச் செல்ல முடியாது. ஆனால் கொரோனா தொ ற்று தொடர்பாகச் சரியான புள்ளிவிபரங்கள் கிடைக்க வில்லை. இரசாயான ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்படும் பி.சி.ஆர். அறிக்கை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. நாளாந்தம் சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் விரைவான அன்டிஜன் பரிசோதனை தொடர்பான அறிக்கை புள்ளிவிபரத்தில் இடம்பெறுவதில்லை.
அவர்கள் வேண்டும் என்றே செய்கிறார்களோ அல்லது அவர்களின் கவனக் குறைவோ எனத் தெரியவில்லை.தற்போது விரைவான அன்டிஜன் பரிசோதனை மூலம் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது என்றும் விரைவான அன்டிஜன் பரிசோதனை சுகாதார பிரிவால் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் குறித்த அறிக்கை புள்ளிவிபரங்களில் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கே: இந்த நிலைமை ஆபத்தானது இல்லையா? அதாவது நாட்டை முடக்குவது தொடர்பாக ஜனாதிபதி தீர்மானம் எடுப்பது இந்த நிலைமையைப் பார்த்துத் தானே? பதுளை , கம்பஹா மாவட் டத்தில் ஆபத்தான நிலைமை காணப்படுகிறது. இந்த தீர்மானம் பிழை இல்லையா?
ப :இலங்கையில் தற்போது நாடும் முழுவதும் நிலைமை ஆபத் தானதாகத் தான் காணப்படுகின்றது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானம் பொதுவாக இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா தொற்றாளர்களின் மரணங்கள் குறித்துத் தான் தீர் மானம் எடுக்கப்படும். இந்த நிலைமை தவறு ஏற்படக் காரணம் என்பது நாட்டின் சூழ்நிலையைப் பொறுத்து தீர்மானம் சரியாக எடுக் காவிட்டால் தவறாகி விடும்.
கே: நீங்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தீர்கள் கடந்த வாரம் நாடு முடக்கப்படும் அல்லது தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் அமு லாகும் என…. நீங்கள் உட்படப் பல வைத்திய அதிகாரிகள் கோரிக்கை முன்வைத்தும் நாடு முடக்கவில்லை மாகாணங் களுக்கிடையிலான கடுமையான கட்டுப்பாடு மாத்திரம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நீங்கள் கூறுவது என்ன?
ப: புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கவில்லை. மீண்டும் மாகாணங்களுக்கிடையில் மாத்திரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கடந்த வெள்ளிக்கிழமை திருமண விழாக்களுக்குச் செல்வோர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது.
அத்தோடு நேற்று முன்தினம் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படாமை குறித்து பொதுமக்கள்,சிவில் சமுகம் மற்றும் சமூகங்களில் இது தொடர்பாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.நாங்கள் எதிர்பார்த்த படி தீர்மானம் 100 -100 வீதம் நாட்டை முடக்காவிட்டாலும் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பதாகப் பிரதமர் பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போது நிலவும் நிவாரண முறை மற்றும் சிகிச்சை முறை மூலம் சுகாதாரப் பிரிவு கொள்ளளவு திறனில் பாரிய நெருக்கடியில் இருக்கிறது.நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதாரப் பிரிவுகள் கொள்ளளவு திறனை மீறியுள்ளன. அத்தோடு சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களிடையேயும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொற் றாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க எதிர்வரும் நாட்களில் நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கே:அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் பொது மக்கள் ஈக்களைப் போல் மரணிக்கின்றனர் என்றும் கொள்கலன்களில் கொரோனா தொற்றாளர்களின் சடலங்கள் ஏற்றிச் செல்வதாகவும் வட்ஸ்அப்பில் நான் அவதானித்திருக்கிறேன். இந்த நிலையில் ஏன் நாடு முடக்கப்படவில்லை?
ப : பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது மற்றும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது இரண்டுக்கும் நடுவில் கொரோனா தடுப்பு செயலணி இறுகியிருக்கிறது. இவை இரண்டையும் சமப்படுத்தி தீர்மானம் எடுப்பதில் சிக்கல் உள்ளது.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி எவ்வளவு தூரம் முன் னோக்கிச் சென்றாலும் நீங்களும் நானும் இல்லாத நாட்டில் பொரு ளாதாரத்தைக் கட்டியெழுப்பு எந்தப் பயனும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இதை தீர்மானத்தை மேற்கொள்ளும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பெற்றோர்கள் இல்லாமல் நாட்டை முன்னெடுத்துச் சென்றால் எந்தப் பயனும் இல்லை என்று அவர் தெரித்துள்ளார்.
கே:நாட்டை முடக்க அல்லது தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை அமுல் படுத்தப் போவதில்லை என எதிர்பார்க்கிறீர்களா?
ப:ஆம். நாங்கள் அரசாங்கத்தை அல்லது அதிகாரிகளை வற்புறுத்தவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவோ போவதில்லை. பொது மக்கள் மரணிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொதுமக்கள் கொரோனா தொற்று காரணமாக சுவாசிப்பதில் அசௌகரியத் துக்குட்பட்டு மரணிப்பதையும் மற்றும் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் இடம் இல்லாமல் வாகனங்களில் மரணிப்பதை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
நாங்கள் இதனை தவிர்த்துக்கொள்ள அதற்கு மாற்றீடாக முடிந்தவரை சுய பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம். இதனால் கொ ரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம்.
கே: பொது மக்களிடம் நீங்கள் கேட்பது என்ன?
ப: முடிந்தவரை வீடுகளில் அத்தியாவசிய பொருட்களைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வீட்டிலிருந்து எந்தவொரு காரணத்திற்காகவும் வெளியேற வேண்டாம். உங்களின் வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள் என பொதுமக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களின் வீடுகளுக்கு அயலவர்கள் மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டாம். அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் தான் வெளியேற வேண்டும். அதாவது மருந்துகள் மற் றும் உணவுகள், தொழில்களுக்கு மாத்திரம் வெளியேற வேண்டும். அவசியம் இன்றி வெளியேற வேண்டாம்.
இது உங்களின் உயிர் சம்பந்தமான பிரச்சினை.சகல விற்பனை நிலையங்கள், சிவில் சமூகம் , தொண்டு நிறுவனங்கள் மற்றும் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து நாட்டுக்குள் சுய பயண கட்டுப்பாட்டை மேற்கொள்வோம். முடிந்த வரை ஒரு வாரமாவது பயணக்கட்டுபாட்டை மேற்கொள்வோம்.
கே: பொதுச் சுகாதார சங்கத்தினர் 2700 பேர் இருக்கின்றனர். தற்போது கட்டுப்பாட்டு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் சில பகுதிகளில் எல்லை மீறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது பற்றி… ?
ப: ஆம். கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் ‘தனிமைப்படுத்தப்பட்டுள்ளது’ என்ற வாசகத்தை ஒட்டுவதற்குக் கூட முடியாத வகையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர்.கடந்த வாரம் 6 நாட்களில் மாத்திரம் 23 பேர் கொரோனா தொற்றாளர்களாக பொது சுகாதார அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் பொதுச் சுகாதார அதிகாரிகள் பலர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவர். இந்த நிலை மேலும் நீடித்தால் நிவாரணம் வழங்கும் தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுச் சுகாதார அதிகாரிகளின் பணிகள் அதி கரிக்கும். தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலை சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் வாய்ப்பு குறையும். நோயாளர்கள் வைத்தியசாலைகளைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.சுகாதாரப் பிரிவும் மற்றும் பொதுச் சுகாதார அதிகாரி களும் கொள்ளளவு திறனை மீறிவிட்டதால் தொடர்ந்தும் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது.இன்னும் 14 நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பர். இன்று முதல் நடவடிக்கை எடுத்தால் 14 நாட் களில் குறைந்தது 500 கொரோனா தொற்றாளர்கள் குறை வார்கள்.
அவ்வாறு குறையாவிட்டால் வைத் தியசாலைகளில் இடம் இருக்காது.பொதுமக்கள் முடிந்தவரை சுய பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருங்கள்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிகளுக்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கிறோம் மற்றும் அத்தியாவசிய விற்பனை நிலையங் களை மாத்திரம் திறந்து ஏனைய நிறுவனங்களை மூடி இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
.அனைத்து சமயத் தலைவர்களும் இணைந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்