(நோ்காணல் அஷ்ரப் ஏ சமத் )

நீதியமைச்சர் அலி சப்றி அவா்கள் 11.09.2021 அவரது கொள்ளுப்பிட்டி இல்லத்தில் வைத்து முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டம் பற்றி எனக்கு வழங்கிய செவ்வியின்போது அவா் கூறிய 30 நிமிட கருத்துக்களின் சுருக்கம்.

கே. தற்பொழுது முஸ்லிம்கள் மத்தியில் பேசு பொருளாக முஸ்லிம் விவாகம் மற்றும் விவகாரத்து சட்டத்தினை நீங்கள் நீதி அமைச்சராக வந்ததன் பின்னா் அன்மையில் அமைச்சரவையில் ஒர் அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து அதனை முற்றாக மாற்றியமைப்பதகாக சொல்லியிருந்தீா்கள் இவ் விடயம் பற்றி முஸ்லிம்கள் மத்தியில் பல எதிா்ப்புக்களும் பல்வேறு விமா்சனங்கள் எழுந்துள்ளன. இவை பற்றி உங்கள் கருத்து என்ன ?

ப. முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டுவருதல் வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. இவ் விடயம் எங்களது சமுகத்தில் இருந்தே நீண்டகாலமாக சொல்லப்பட்டு வந்த விடயம். அதன் பின்னா் நீதியமைச்சா் பலா் பதவி வகித்த காலத்தில் காலத்துக்கு காலம் இத் துறை சாா்ந்தவா்களை குழுவாக அமைத்து பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.

1956ல் இருந்த காலத்திலிருந்தே முஸ்லிம் விவாகம் மற்றும விவகரத்து சட்டம மாற்றம் பற்றி திரு. கனகரணத்தினம் கியு.சி, கலாநிதி பாருக் குழு, கலாநிதி சகாப்தீன் குழு, உயா் நீதிமன்ற நீதியரசா் கலாநிதி சலீம் மஹ்சுப் குழு என பல்வேறு முஸ்லிம் சட்ட அறிஞா்களது அறிக்கைகள் கடந்த 70 வருடகாலமாக நீதி அமைச்சில் சமா்ப்பிக்கப்பட்டு வந்துள்ளன. இறுதியாக ஓய்வு பெற்ற நீதியரசா் சலிம் மா்சூப் அவா்களின் அறிக்கையும் நீதியமைச்சில் உள்ளது.

தற்காலத்தில் சவுதி அரேபியாவில் கூட 18 வயதிற்கு குறைந்த வயதில் திருமணம் முடிக்கமுடியாது. அதற்கு காரணம் வங்கி ஒன்றில் கூட நடைமுறைக் கணக்கொண்றை செல்படுத்தல் வேண்டுமென்றால் 18 வயது கட்டாயமாகும். ஒரு சொத்துரிமையை உறுதிப்படுத்தி அதனை மாற்றுவதற்கும் நீதிமன்றம் சென்று அனுமதி பெறப்படல் வேண்டும். இதனால் தான் இந்த இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திலும் பல மாற்றங்களை செய்தல் வேண்டும். எமது நாட்டில் உள்ள காழி நீதிமன்றங்களின் படி எமது சமூகத்தில் உள்ள பெண்களுக்கு கூடிய கல்வித் தகமைகள் இருந்தாலும் அவா்கள் ஒருபோதும் பெண் காழி நீதிபதியாக வரமுடியாது.

ஆனால் இன்று சிங்கப்பூர், ஒரு முஸ்லிம் பெண் ஜனாதிபதி, மலேசியா, பாக்கிஸ்தான் பிரதம நீதியரசா்களாக அந்த நாடுகளின் முஸ்லிம் பெண்கள் இப் பதவிகளை வகிக்கின்றனா். நமது சமூகத்தில் நுாற்றுக்கு 65 வீதமான முஸ்லிம் பெண்கள் பல்கழைக்கழக பட்டதாரிகளாக உள்ளனா். அப்பாடியான பெண்களுக்கு கூட தனது வாழ்வில் ஒரே ஒரு முறை நடைபெறுகின்ற விவாகச் சான்றிதழில் கூட கையொழுத்திட்டு தனது திருமணத்தினை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. பெண்கள் ஏன் காதி நிதிபதியாக வரமுடியாது? எனக் கேட்கின்றேன். காதி நீதிபதியினால் விவாகரத்து பெற்ற ஒரு பெண் தனது பிள்ளைகளுக்கு கணவரால் பராமரிப்புச் செலவு பெறாவிட்டால் காதிநீதிபதியின் கடிதம் எடுத்துக்கொண்டு சிவில் நீதிமன்றதுக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரே வேளையை இரண்டு முறை நீதிமன்றம் செல்ல வேண்டி உள்ளது. பிள்ளைச் செலவு கட்டண விடயத்தில காதி நீதிபதியினால் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாமல் அவா்களுக்கு உள்ளது.ஆகவே தான் முஸ்லிம் விவாகம் விவாகரத்துச் சட்ட காழி நீதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வருதல் வேண்டும். நான் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஒர் அமைச்சரவை பத்திரமொன்றைச் அமைச்சரவைக்குச் சமா்ப்பித்தேன். அதில் திருமண வயது 18 வயதாக இருத்தல் வேண்டும். அதனை எல்லோறும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனா்.

முஸ்லிம் பெண்களும் காதி நீதிபதியாக வரமுடியும். தாபரிப்பு செலவுகளுக்காக காதி நீதிபதியிடம் கடிதம் எடுத்துக் கொண்டு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேரடியாக செல்ல வேண்டும். தாபரிப்பு ” ஒருத்தா் வேறு ஒரு திருமணம் முடிப்பது என்றால் ஏற்கனவே முடித்த பெண்னுக்கு எவ்வித கொடுப்பணவையும் கொடுக்காமல் விவகரத்து பெற்று இலேசாக இன்னொரு திருமணம் முடிப்பதை தடுத்தல். அதற்காக ஒரு சரியான சட்டத்தினை ஏற்படுத்தல். இது நியாயம் இல்லையா? இதில் நீதியில்லையா ? அதை மாற்றி ”மத்தா’ ஏற்படுத்தல் வேண்டும்.

இந்தப் பெண்கள் கடந்த காலங்களில் கஸ்டப்படுவதை நமது கண்களுக்குத் தெரியவில்லையா ? இதனையே நான் மாற்றம் கொண்டுவருவதற்காக முனைகின்றேன். அதில் காதி நீதிமன்றத்திலும் சில மாற்றங்கள் கொண்டுவருதல் வேண்டும் நான் ஒருபோதும் காதி நீதிமன்ற முறைமையை ஒழிக்க வேண்டும். அதனை நான் செய்கின்றேன் என பலா் பலமாதிரியாகப் என்னைப் பற்றி பலதையும் பேசுகின்றாா்கள். திருமணம் முடிக்கும் விடயத்தில் துருக்கி, ஆஜா்பைஜான், ஹிசேனியா போன்ற பல நாடுகளில் 2 க்கு மேல் திருமணம் முடிக்க முடியாது. சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் கூட முதலாவது பெண்னின் அனுமதியைப் பெறப்படல் வேண்டும். முதலாவது பெண் அனுமதி வழங்காவிட்டால் ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உரிய நியாயங்களை காட்டி நீதிமன்ற்த்தினால் அனுமதி பெறப்பட்ட பின்பே அவா் இரண்டாவது திருமணம் முடிக்க முடியும்.

இரண்டு, பெண்களையும் சமமாக நிர்வகித்தல் அவரது பொருளாதார நிலைமை உடல் வலிமை என பாகுபாடின்றி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படல் வேண்டும். முதல் பெண்னின் அனுமதியின்றி பலதார திருமணங்கள் செய்ய முடியாது.

ஆனால் எமது சமுகத்தில் பல பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளாா்கள். பெண்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படல் வேண்டும். ஆகவே தான் கடந்த மாா்ச் மாதம் அமைச்சரவையில் எனது அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த பிறகு அதில் சில மாற்றங்கள் செய்வதற்கு அமைச்சரவை சில ஆலோசனை செய்துள்ளாா்கள்.

இவா்கள் என்ன சொன்னாலும் முஸ்லிம் விவாகரத்து விவாக சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதில் நான் நிறுத்தப்போவதில்லை.

நான் சமா்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் கண்டிப்பாக கூறியது. இச் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வருதல் வேண்டும். conditionally polygamy மாற்றம் செய்தல் வேண்டும். உங்களுக்குத் தெரியும் இப்போது ஆட்சியில் இருக்கின்ற அரசினது விஞ்ஞாபனத்தில் ஒரே நாடு , ஒரே சட்டம் அதில் அவா்கள் கூறுவதெல்லாம் முடியுமான அளவு அதனை அமுல்படுத்தல் வேண்டும் எனக் கூறினாா்கள்.

அவா்கள் அமைச்சரவையில் கூறினாா்கள் தற்பொழுது இருக்கும் முஸ்லிம் சட்டம் அமுலில் இருப்பதற்கு பராவயில்லை ஆனால் சில நிவா்த்தி செய்யக்கூடிய பிள்ளைச் செலவு. பெண்களது தாபரிப்பு போன்ற பிரச்சினைகளான சில அதிகாரஙகளை மாவட்ட நீதிமன்றதுக்கு வழங்குங்கள். எனக் கூறினாா்கள்.

நான் இதற்கு முன் வந்திருக்காவிட்டால் இந்த அரசு ஆட்சிக்கு வந்ததுமே இதனை இலகுவாக இந்தச் சட்டத்தினை மாற்றி பொதுச் சட்டத்திற்குள் கொண்டு வந்திருப்பாா்கள் Simply repeals . Muslim Marriage and Divorce Act is hereby repealed and hereafter General Marriage Law is apply for all parties is respect of religion or races are origin இந்த வசனமூலம் மாற்றியிருப்பாா்கள். நான் அதனை தடுத்து முஸ்லிம் சட்டம் பற்றிய ஆலோசனை குழுவொன்றை நியமித்தேன்.

அதில் காழிமாா்களை அழைத்து அவா்களுக்கு உள்ள பிரச்சினைகளை ஆலோசித்து அப் பிரச்சினைகளை தீா்தத்துக் கொள்வதற்கே முயற்சிக்கின்றேன். தற்பொழுது இரண்டு தடவைகள் காதிகளிடம் போகமால் ஒரே தடவையில் நீதிமன்ற தாபரிப்பு – பராமறிப்பு போகக் கூடிய வகையில் மாற்ற வேண்டும். சிறிய பிள்ளைகளது பராமரிப்பு பிரச்சினையும் தீா்த்துவைப்பதில் முயற்சியிலும் எங்களது சட்டத்தினையும் காப்பாற்றுவதற்கு நான் போராடி வருகின்றேன்.

ஆனால் எம்மவா்கள் என்னைப்பற்றி ஒரு பிழையான கோணத்தில் சித்தரிக்கின்றனா். இதற்கு ஒருபோதும் நான் பயப்படப்போவதில்லை. நான் ஒருத்தன் அந்த அல்லாஹ்வுத்தாலாவை மட்டுமே பயந்தவன்.

எனக்கு எதைச் செய்ய வேண்டும். எதனைச் செய்யமுடியாது என்பது பற்றி அந்த அல்லஹ்க்குத்தான் தெரியும். அதனால் நான் மீண்டும் இதனை அமைச்சரவைக்கு சமா்ப்பித்த பிறகு அமைச்சரவை என்ன சொல்கின்றதோ அதையே செய்ய முடியும். முப்பது பேர் கொண்ட அமைச்சரவையில் நான் மட்டுமே முஸ்லிமாக உள்ளேன். எம்மில் சிலா் இதை ஓர் அரசியல்மயமாக்கிப் பாா்க்கின்றாா்கள் எங்களுக்குத் தெரியும் இதற்குப் பின்னால் யாா் யாா் இருக்கின்றாா்கள் என்று ? சிலா் நல்ல என்ணத்தோட பேசுகின்றாா்கள். அவா்களிடம் நாம் பேசமுடியும். இதில் சில மாற்றம் கொண்டு வரத்தான் வேண்டும். என சொல்கின்றாா்கள்.

இதையெல்லாம் அறிந்தவன் அந்த அல்லாஹ் அவனது தேவையின்படித்தான் நடக்கும். எனக்கு ஒரு முயற்சிதான் செய்யமுடியும். . நான் அமைச்சரவையில் கூறியது என்னவென்றால் நாம் இவ்வாறு வேறுபாடாக முஸ்லிம் சமுதாயத்தினைப் பாா்த்தோம் என்றால் முஸ்லிம்கள் மத்தியில் பல பாதிப்புக்களும் வெறுப்புக்களும் ஏற்படும்.

இதில் ஒரு சமதா்மம் நியாயான முறைக்கு நாம் வருதல்வேண்டு்ம். என கூறித்தான் இவ்வளவு துாரத்திற்கு இதனைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றேன். ஆனால் எனக்கு ஏசுபவா்கள் என்ன செய்தாா்கள். கடந்த கால அரசாங்கத்தில் 23 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் இருந்தாா்கள். அவா்கள் என்ன செய்தாா்கள் ? இவா்களுக்கு இலகுவாக அன்று செய்திருக்க முடியாமல் போகிவிட்டதா?

இதனைப் பற்றி பேசுகின்ற முஸ்லிம் பெண் ஒருவாின் நெறுங்கிய உறவினா் அமைச்சராக இருந்தாா் அவா் என்ன செய்தாா் ? சமுகத்திற்கு செய்யதது ஒன்றுமே இல்லை. அதனால் நாம் இந்த சூழ்நிலையில் இப்படி இருக்கின்றோம். இவா்கள் எவரும் இந்த சட்டத்தினை கண்டதுமில்லை, சட்ட வரைபினைக் கூடப் பாா்த்ததுமில்லை, சட்டம் பற்றி இவங்க தெரிந்ததுமில்லை. நடைமுறையில் உள்ள சட்டம் பற்றிய பிர்சினைகள் இவா்களுக்கு விளங்குவதுமில்லை.

இதைப்பற்றி நான் அறிந்து வரைபொன்றினை தயாரிப்பதற்கு ஒரு குழு வொன்றினை முஸ்லிம் சமய திணைக்களத்தின் கீழ் உள்ள வக்பு சபையின் தலைவா் சட்டத்தரனி சப்றி அவா்கள் தலைமையிலும், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளா் அஸ்ரப் , அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளா் கொழும்பு பல்கழைக்கழகத்தின் ,சட்டத்துறை கலாநிதி ஹக்கீம் உட்பட சில உறுப்பிணா்களை நியமித்தேன்.

அவா்களுடன் இணைந்து இந்த நாட்டில் கஸ்டப்படும் எமது பெண்கள், சிறுவா்களது எதிா்நோக்கும் பிரச்சினைகளை எதிா்காலத்தில் எவ்வாறு பாதுகாக்க முடியும். அதனையே இந்தச் சட்டத்தின் ஊடாக சில மாற்றங்கள் அறியப்பட்டன. எம் மத்தியிலும் மாற்றங்கள் வரல் வேண்டும். இல்லாவிட்டால் அல்லஹ் கூறுகின்றான் எந்த சமுதாயம் தன் தலைவிதிலைய மாற்றிக் கொள்ளாதவரை நான் அதனை ஒருபோதும் மாற்ற மாட்டேன்.

ஆகவே தான் அதற்கான காலம் நம்மிடம் வந்துள்ளது உலகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. எமது முஸ்லிம் பெண்களுக்கு உரிய அந்தஸ்த்தினை நாம் வழங்குதல் வேண்டும். எமது சமுகத்தில் விவாகரத்து பெற்ற பெண்கள் குழந்தைகள் சிறுபிள்ளைகளோடு எவ்வளவு கஸ்டப்படுகின்றாா்கள். ஆண்கள் இலகுவாக விவகாரத்துப் பெற்று பலதார திருமணம் முடிக்கின்றனா். அந்த பிள்ளைகளுக்காக சிறு தொகையே செலுத்துகின்றனா்.

முன்பு இருந்த இந்த நாட்டில் நீதியமைச்சா்களாக இருந்த காலத்தில் இவ்விடயத்தினை மிக இலேசாக செய்திருக்க முடியும். இவ்விடயத்தில் அவா்கள் அவா்களது பெயா்களை காப்பாற்றிக் கொண்டு சமுகத்திற்கும் எமது பெண்களுக்கும் என்ன நடந்தாலும் பரவாயில்லை.

அவா்கள் இன்னொறுவரின் தலையில் இவ்விடயத்தினை விட்டு விட்டு அவர்கள் நல்ல பிள்ளையாக சமுதாயத்தில உள்ளாா்கள். அதனையே நானும் செய்ய முடியும். இருந்தும் அமைச்சரவையில் நான் மட்டும் எடுக்கும் தீா்மாணம் இல்லை. ஏனைய முழு அமைச்சரவையும் இணைந்து எடுக்கும் முடிவினையே நாம் ஏற்கத்தான் வேண்டும். என நீதியமைச்சா அலி சப்றி தெரிவிததாா்.