எஸ் ஜே புஹாது

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இலங்கையில் ஊரடங்கு விதிப்பது தற்போது தீர்வாகாது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில்இ இந்த முக்கியமான தருணத்தில் நாட்டை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்

சுகாதார விதிமுறைகளை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் நாட்டில் பல போராட்டங்களுக்குத் தூண்டியதாகக் கூறிய அமைச்சர் ரணதுங்காஇ இது கொரோணா வைரஸின் குறிப்பிடத்தக்க பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார்

அரசாங்கத்தால் நாடு முழுவதும் முடக்கப்பட்டால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டை முடக்குவது குறித்து முடிவெடுப்பதற்கு முன் பொதுமக்கள் மற்றும் பிற துறைகளில் ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொள்ளுமாறு அவர் ஜனாதிபதியை கேட்டுள்ளார்