முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தினால், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி, கன்னித் தன்மையுடன் உள்ளமை மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய யுவதியொருவர், 2016ம் ஆண்டு மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும், குறித்த யுவதி தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதன் அறிக்கை கடந்த 16ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ அறிக்கையின் பிரகாரம், குறித்த யுவதிக்கு கன்னி கலைந்தமைக்கான அறிகுறிகள் கிடையாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்தே, சந்தேகநபரை 5 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதீமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம், சந்தேகநபரின் கடவூச்சீட்டை நீதிமன்றத்தின் பொறுப்பிற்கு ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இணைந்திருங்கள்