ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தாலிபான்கள்இ மக்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்றுஇஇ பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்குவோம் என்று தெரிவித்துள்ள நிலையில்இ அவர்களின் அறிவிப்பின்மேல் பரர் நம்பிக்கையற்றவர்களகே இருந்து வருகின்றனர். அதை உறுதி செய்யும் வகையில்இ பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

புர்கா அணியாத இளம்பெண்ணை சுட்டுக்கொண்டு தங்களது ஆட்டத் தொடங்கி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் பெண் ஒருவர் பர்தா அணியாததால் தாலிபான்கள் ஈவு இரக்கமில்லாமல் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் உலக நாடுகளுக்கும்இ பெண்களும் அளித்த உறுதிமொழியை காப்பாற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் அந்த நாட்டில் உள்ள முக்கிய பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலையும் கைப்பற்றினர். தாலிபான்களின் வெறியாட்டத்துக்கு பயந்துஇ ஆப்கான் மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆனால் தாலிபான்களோஇ மக்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்இ பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்குவோம் என்று தெரிவித்து மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர்களின் வெறியாட்டமும் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில்இ ஊடகத்தில் பணியாற்றி வந்த 14 பெண்களை கொன்றதுடன் பலரை தாக்கியும் உள்ளனர். கொல்லப்பட்டனர்இ 22 பெண்கள் படுகாயமடைந்தனர். இதனால்இ அவர்களின் அறிவிப்பை மக்கள் ஏற்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் தாலிபான்களின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. தக்ஹார் (வுயமாயச) மாகாணத்தில் வடக்கு நகரான டோலகான் (வுயடழஙயn) பகுதியில் பெண் ஒருவர் பர்தா அணியாமல் இருந்ததால் அவர் மீது தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். நடுரோட்டில் இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்ணின் உடலை கண்டு குடும்பத்தார்கள் கதறி அழும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதற்கு மத்தியில் ஜலாலாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்இ தாலிபான்கள் தங்கள் கொடியை அரசு அலுவலங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆப்கன் தேசிய கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினர். அப்போது தாலிபான்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

பத்கிஸ் மாகாண காவல்துறை தலைவரை சுட்டுக்கொன்றனர். காஸ்னி மாகாணத்தில் தாலிபான் ஆட்சி எதிர்த்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்னிஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே தங்களுடைய ஆதிக்கத்தை உணர்த்தும் விதமாக ஜாபுல் மாகாணத்தில் உள்ள குவாலத் நகரத்தில் ஆயுதம் ஏந்திய தாலிபான் தீவிரவாதிகள் அடையாள அணிவகுப்பு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவங்கள் தாலிபான்கள் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்துள்ளது.