நாட்டை செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கினால்தான், உயிர்களைப் பாதுகாக்க முடியும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி,
நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால்தான் உயிர்களைப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“டெல்டா வைரஸ் பிறழ்வடைந்து, மேலும் ஒரு திரிபு தற்போது கொழும்பில் பரவிக் கொண்டிருக்கின்றது.இந்தத் திரிபு ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மேலும் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 10 ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், தற்போயை சூழ்நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.
இதற்கு காரணம், பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றது. ஆகையினால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே உரிய பாதையை நோக்கி பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைந்திருங்கள்