ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள குண்டூஸ் நகரில் உள்ள , செய்து அபாட் மசூதியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் உடல்கள் மசூதி முழுவதும் பரவிக் கிடந்ததாக தொிவிக்கப்படுகின்றது
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும் ஐ.எஸ். உள்ளிட்ட சுன்னி முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களை இலக்குவைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இணைந்திருங்கள்