தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு என ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஐஸ்வர்யா, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த வரவேற்பை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது மகத் நடிப்பில் உருவாகி வரும் ‘காதல் Condition apply’  என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதால் விரைவில் ரிலீசாகும் என தெரிகிறது. 

இந்நிலையில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ளார். கருப்பு நிற டிரான்ஸ்பரண்ட் உடை அணிந்த இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு படுக்கையறையில் பாம்பு போன்று நெளிந்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது