கெரவலபிட்டிய, யுகதனவி மின் நிலையத்திற்குரிய 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறுத்த உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எல்லே குணவன்ச தேரர் மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை, அமைச்சரவைச் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் ஒரு தரப்பான அமெரிக்க நியு போடரஸ் நிறுவனமும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.