( மினுவாங்கொடை நிருபர் )
உற்பத்தி விலையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், முட்டை விலை உயர்வையும் கட்டுப்படுத்த முடியாது என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதும் கூட 22 ரூபாவிற்கு நுகர்வோருக்கு முட்டை வழங்கப்படுவதாகவும், அது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சங்கத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு கிலோ சீனியின் நிர்ணயிக்கப்பட்ட விலை 122 ரூபா என விதிக்கப்பட்டுள்ள போதிலும், சீனியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும், இந்நிலையில், ஒரு கிலோ சீனி 140 ரூபாவுக்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இணைந்திருங்கள்