13 ஆவது திருத்தம் மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்பொழுதும் உறுதியாக இருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) காலை TMNA ​​தம்மை இல்லத்தில் சந்தித்த போது தமிழ் முஸ்லிம் கூட்டணிக்கு உறுதியளித்தார்.

ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரு நாடு ஒரு சட்டம் ‘ செயலணியைப் பற்றி மைத்திரி பால சிறிசேன பதிலளிக்கையில் .இந்த தருணத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

இந்த பின்னணியில் முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசிய பணிசபையின் தலைவருமான கலாநிதி குமரகுருபரன், TMNA யின் செயலாளர இப்றான்சா பௌறுதீன் ( பௌமி ) மற்றும் சஞ்செயன் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த நிலைப்பாடுகள் மாத்திரமே இலங்கையின் ஒருமைப்பாட்டை இறைமையை மேலும் வலுப்படுத்த முடியும் என மீண்டும் வலியுறுத்தினர்.

அதிகாரப் பகிர்வின் ஆரம்பமாக அர்ரசியல் அமைப்பின் 13. ஆவது திருத்தம் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் தேவை என்பவற்றை .மீள்லியுறுத்தும் ஒரு பணியை நாம் ஆரம்பித்து தொடர்கிறோம் அரசின் பங்காளிக்கட்சிகளுடன் ஆரம்பித்திருக்கின்ரோம்.இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதே நோக்கம்.என இப்றான்சா பௌறுதீன் ( பௌமி ) தெரிவித்தார்.