லங்கா ப்ரீமியர் லீக் தொடரில், கொழும்பு ஸ்டார்ஸ் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணி, ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 137 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.