நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு 229 பில்லியன் நிதி அச்சிடப்பட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு  உச்சளவிலான பணவீக்கம் எதிர்காலத்தில் தோற்றம் பெறும் என ஸ்ரீ லங்கா கம்யூனிச கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டி.யு குணசேகர தெரிவித்தார்.

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. கொவிட் -19 வைரஸ் இலங்கைக்கு மாத்திரம் தாக்கம் செலுத்தவில்லை. இலங்கையை போல் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் கையாண்டுள்ளதுடன்,டொலர் நெருக்கடியினையும் சீர் செய்துள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் காணப்படுகிறது. வரையறையற்ற வகையில் நாணயம் அச்சிடும்போது அத்தியாவசிய பொருட்களின் விலை இயல்பாகவே அதிகரிக்கும்.

இவ்வாறான பின்னணியில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 229 பில்லியன் செலவில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானித்துள்ளார். 

தேசிய வருமானம் குறைவடைந்துள்ள நிலையில் 229 பில்லியன் நிதி கண்மூடித்தனமாக அச்சிடப்பட்டால் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு  உச்சளவிலான பணவீக்கம் உச்சமடையும் என்றும் அவர் கூறினார்.