நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்கவின் கார் மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனவே தாக்குதல் சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை மறுத்து, ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
முட்டைத் தாக்குதலை நடத்தியவர்களுக்கும் அதனை நடத்த கூறியவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்