ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் உள்ள உக்ரைன் சமூகத்தினர் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரேனிய பிரஜைகள் தூதரகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதுடன் ‘ரஷ்யா ஆரம்பித்த ‘முழு அளவிலான போர்’ பொதுமக்களிடையே உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

எந்த நாட்டையும் போல தமக்கு அமைதியான போராட்டத்திற்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புவதாக உக்ரேனிய பிரஜைகள் தெரிவித்தனர்.

“அமைதியான உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரவும் பகலும் இடைவிடாது தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய எல்லைக்குள் சட்டவிரோதமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து எல்லையை கடந்து செல்கின்றன.

உலகம் ரஷ்யாவை தடுக்க முடியும் மற்றும் தடுக்க வேண்டும். இது சர்வதேசத்தின் நேரம். சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.