அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் சொற்போர் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இவ்விருவரையும் கடுமையாக விமர்சித்து, ஊடக சந்திப்புகளை நடத்திவருகின்றனர்.

விமலும், கம்மன்பிலவும் ‘காட்போட் வீரர்கள், ‘மைக் டைசன்கள்’ என சாடியுள்ளார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.

அரசில் இருந்துகொண்டு சகலவித சிறப்புரிமைகளையும் அனுபவித்தபடி விமர்சிப்பதைவிட, அவர்கள் வெளியேறியே விமர்சனங்களை முன்வைத்திருக்க வேண்டும் எனவும், நாட்டை சீரழித்த மைத்திரியுடன் கூட்டு சேர்வது வெட்கக்கேடாகும் எனவும் அவர் சாடியுள்ளார்.

அத்துடன், விமல் வீரவன்ச ஜனாதிபதி கனவில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி விமர்சித்துள்ளார்.