பிரதமரின் பாதுகாப்பில் விமலும், கம்மன்பிலவும்!

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு அமைச்சரவையில் வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொதுவாக இரண்டு மெய்க்காப்பாளர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள்.

இதன்படி அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை பாதுகாப்பு நீக்கப்பட இருந்த நிலையில், பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

விமல் கம்மன்பிலவின் நகர்வு – உதறிய கையை பற்ற முனைகிறார் கோட்டாபய!

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்துக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையின் கீழ், இனியொருபோதும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என, விமல் வீரவன்ச உறுதியாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், நாளையதினம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

விமலையும், கம்மன்பிலவையும் அழைக்கிறது மைத்திரி கூட்டு!

அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்விரு கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அண்மையில் கூடிய கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்திலேயே இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்னும் சில கட்சிகளை இணைந்துகொண்டு முழுமையான கூட்டமைப்பை உருவாக்குவதற்​கே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் திட்டம் வகுத்துள்ளது.

அதனடிப்படையில் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதக கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கும் கலந்துரையாடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

விமலையும், கம்மன்பிலவையும் பிடித்து வைத்திருக்க வேண்டும்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்றுச் செயற்பட முடியாது.

ஶ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அரசில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறட்டும். அதனை தடுக்கவில்லை. ஆனால், விமல், கம்மன்பில போன்றவர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன வழமைபோல் தனது வேலையை விமல், கம்மன்பில போன்றவர்களுக்கும் காண்பித்துவிட்டார். பங்காளிக் கட்சிகளின் மாநாட்டுக்கு சமூகமளித்த தந்த அவர், பங்காளிக் கட்சிகள் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே, நம்ப வைத்துக் காலைவாரிவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.