பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களில் நாடு சீர்குலைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

பொருட்களை வாங்குவதற்காக நாடு முழுவதும் மக்கள் வரிசையில் நிற்பது, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதை காட்டுவதாக கூறினார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது நாட்டைப் பாதுகாக்கும் தேசிய நிகழ்வாக அமையும் என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.