திருகோணமலை – கிண்ணியா, நடுவூற்று பகுதியில் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகத்தில் 30 மற்றும் 35 வயதுகளை உடைய இருவர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பகுதியை சேர்ந்த 30, 43 மற்றும் 54 வயதான 03 சந்தேகநபர்களே இன்று(08) காலை கைது செய்யப்பட்டதாகவும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய 09 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வொ தெரிவித்துள்ளார்..
இணைந்திருங்கள்