2022 செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் குட்டி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் எனவும், இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதே அரசின் திட்டமாக இருந்தது. எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, உள்ளாட்சிமன்ற தேர்தலை முதலில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிமன்றங்களின் பதவி காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், துறைசார் அமைச்சர் கருதினால் எந்நேரத்திலும் தேர்தலை நடத்தமுடியும்.